பைன் பாரஸ்ட் பகுதியில் காட்டுத்தீ


பைன் பாரஸ்ட் பகுதியில் காட்டுத்தீ
x

பைன் பாரஸ்ட் பகுதியில் காட்டுத்தீ

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊட்டி அடுத்த பைன் பாரஸ்ட் பகுதியில் நேற்று மதியம் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ வேகமாக பரவ தொடங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஊட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து காட்டுத் தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத்தீ குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.


Next Story