வனபாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
திருக்குறுங்குடியில் வனபாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருநெல்வேலி
ஏர்வாடி:
திருக்குறுங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட நம்பி கோவில் சோதனை சாவடியில் வனங்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் வனச்சரகர் யோகேஷ்வரன், டி.வி.எஸ். குழுமத்தின் மண்டல இயக்குனர் முருகன், களஇயக்குனர் லட்சுமி நாராயணன், அறிவழக பாண்டியன், திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் இசக்கிதாய், கல்லூரி பேராசிரியர் சிவராமன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் இயற்கை பாதுகாப்பு குறித்தும், பிளாஸ்டிக் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் நம்பி கோவில் சோதனை சாவடி முதல் நம்பி கோவில் வளாகம் வரை சென்று பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.
Related Tags :
Next Story