தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் வனத்துறையினர்
வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில், தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
திண்டுக்கல்
பழனி, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கோடைகாலம் நெருங்கியதால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் குடிநீர், இரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. இந்தநிலையில் வனவிலங்குளின் தாகம் தீர்க்கவும், அவை குடியிருப்புக்குள் புகுவதை தடுக்கவும் வனத்துறை சார்பில், பழனி வனப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story