நீலகிரியில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க சிறப்பு நக்சலைட் தடுப்பு பிரிவு உருவாக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க முதல் முறையாக சிறப்பு நக்சலைட் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க முதல் முறையாக சிறப்பு நக்சலைட் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கேரள மாநில எல்லையை ஒட்டிய வயநாடு, மலப்புரம் மாவட்ட வனப்பகுதிகளில் நக்சல் நடமாட்டம் உள்ளது.
இவர்கள் நீலகிரியில் நுழைவதை தடுக்கவும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களிலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் நீலகிரி வழியாக செல்வதை தடுக்கவும் தமிழ்நாடு சிறப்பு அதிரடி படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு நீலகிரியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நீலகிரியில் தற்போது 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 36 போலீசார் அடங்கிய 'ஒமேகா 3' என்ற பெயரில் நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணியினர் போதைப்பொருள்கள் கடத்தலை தடுப்பதற்காக நீலகிரி மாவட்ட எல்லையில் 16 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.