முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவுநாள் அனுசரிப்பு


முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவுநாள் அனுசரிப்பு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம், அன்னதானம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம், அன்னதானம் நடைபெற்றது.

அமைதி ஊர்வலம்

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் மற்றும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் இருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் டி.கே.மோகன், ஆ.சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், நகராட்சி தலைவர்கள், ஒன்றியக் குழு தலைவர்கள் உள்பட மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

வில்வநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன், மாதனூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாந்திசீனிவாசன் மற்றும் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் உள்ள தி.மு.க. மேற்கு மாவட்ட அலுவலகம் முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன், ஒன்றிய செயலாளர்கள் தாமோதரன், வி.எஸ்.ஞானவேலன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் உள்ள நகர தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு நகரசபை தலைவர் உமா சிவாஜி கணேசன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் சாரதிகுமார், துணை செயலாளர் தென்னரசு, பெரியபேட்டை சிவா, மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story