முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் மரணம்


முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் மரணம்
x

கடலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 76). முன்னாள் அமைச்சரான இவர் கடந்த 1972 முதல் 1980 வரை கடலூர் நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார்.

கடலூர்,

கடலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 76). முன்னாள் அமைச்சரான இவர் கடந்த 1972 முதல் 1980 வரை கடலூர் நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். அதன் பிறகு தலைமை செயற்குழு உறுப்பினராகவும், கடலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் 1991 முதல் 1996 வரை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜனார்த்தனன், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜனார்த்தனனுக்கு பிரேமா என்ற மனைவியும், வக்கீல் புருஷோத்தமன், கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.


Next Story