அப்துல்கலாம் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை
கோவில்பட்டியில் அப்துல்கலாம் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
தொடர்ந்து கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், டாக்டர்கள் பூவேஸ்வரி, தேவசேனா, அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.