வாலிபருக்கு உதவிய முன்னாள் அமைச்சர் காமராஜ்
வண்டாம்பாளை அருகே விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபருக்கு உதவிய முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நன்னிலம்:
திருவாரூரில் இருந்து நன்னிலம் நோக்கி காரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. சென்று கொண்டிருந்தார் அப்போது வண்டாம் பாளை அருகே திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. காரில் இருந்து இறங்கி வந்து படுகாயம் அடைந்த வாலிபரின் முகத்தில் தண்ணீர் தெளித்தார். பின்னர் அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபருக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. உதவி செய்ததை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காயமடைந்த வாலிபருக்கு உதவி முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டி தெரிவித்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.