முன்னாள் அமைச்சர் சரோஜாவின் கணவர் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் அமைச்சர் சரோஜாவின் கணவர் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உப்பிலியபுரம் ஆர்.சரோஜாவின் கணவர் பி.கே.பெருமாள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
பாசமிகு கணவரை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் சரோஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், பெருமாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story