முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் நினைவு தினம்
செங்கோட்டை அருகே முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி செங்கோட்டை அருகே கற்குடி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செந்தூர் பாண்டியன் மூத்த மகனும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான செ.ஐயப்பராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story