விமானத்தில் செல்போனை தவறவிட்ட முன்னாள் அமைச்சர்


விமானத்தில் செல்போனை தவறவிட்ட முன்னாள் அமைச்சர்
x

விமானத்தில் செல்போனை முன்னாள் அமைச்சர் தவறவிட்டார்.

திருச்சி

சென்னையில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பயணம் செய்தார். விமானம் திருச்சி வந்ததும், அவர் விமானத்தில் இருந்து இறங்கினார். அப்போது, அவர் தனது செல்போனை விமானத்தில் தவறவிட்டார். இதை கவனிக்காமல் காரில் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் கார் சென்றபோது, செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் திருச்சி விமானநிலையம் வந்து விமான நிலைய ஊழியர்கள் மூலம் செல்போனை தேடும் பணியில் ஈடுபட்டார். இதற்கிடையில் திண்டுக்கல் சீனிவாசன் பயணம் செய்த விமானம் மீண்டு் சென்னை புறப்பட்டு சென்றது. அப்போது திண்டுக்கல் சீனிவாசன் பயணம் செய்த இருக்கையில் அமர்ந்த பயணி ஒருவர் அந்த இருக்கையில் செல்போன் இருப்பதை பார்த்து விமான பணிப்பெண்களிடம் வழங்கினார். இந்த தகவல் திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த மற்றொரு விமானத்தில் செல்போன் கொடுத்து அனுப்பப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story