முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி 6-ம் ஆண்டு நினைவு தினம்
தூத்துக்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ.பெரியசாமி 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ.பெரியசாமி 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
நினைவு தினம்
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், தூத்துக்குடி நகராட்சி தலைவராகவும், தூத்துக்குடி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியவர் என்.பெரியசாமி. அவருடைய 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பெரியசாமியின் மனைவி எபனேசர் பெரியசாமி, தி.மு.க .வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் என்.பி.ராஜா, என்.பி.அசோக், ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர் உள்ளிட்ட பெரியசாமியின் குடும்பத்தினர் நினைவிடத்தில் உள்ள பெரியசாமியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேட்டி, 500 பேருக்கு சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மரக்கன்று நட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதா முருகேசன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தெற்கு மாவட்ட தி.மு.க. உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞர்அணி செயலாளர் விநாயகா ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகரன், துணைச்செயலாளர் மாடசாமி, நாம் இந்தியர் கட்சி மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாவட்ட செயலாளர் சுந்தர், துணைச்செயலாளர் ராஜ், திராவிடர் கழக தலைவர் முனியசாமி உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.