முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ் நினைவு தினம்
முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஏரல்:ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஊா்வசி செல்வராஜ் 13-ம் ஆண்டு நினைவு தினம் ஏரலில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கிழக்கு வட்டார தலைவா் தாசன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏரல் நகர தலைவா் பாக்கா் அலி, மாவட்ட பொருளாளா் எடிசன், வட்டார பொருளாளா் அய்யம்பெருமாள், ஏரல் ஓ.பி.சி. நகர தலைவா் பிஸ்மி சுல்தான், யூனியன் கவுன்சிலா் பாரத், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மீனா மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆத்தூர் மெயின் பஜாரில் ஆழ்வை கிழக்கு வட்டார காங்கிரஸ் மற்றும் ஆத்தூர் நகர காங்கிரஸ் சார்பில் ஊர்வசி செல்வராஜ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அவரது உருவப்படத்திற்கு ஆழ்வை கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாலசிங், நகர தலைவர் சின்னதுரை ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஓ.பி.சி. மாவட்ட தலைவர் ராஜ்குமார், ஆத்தூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் கேசவன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.