முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவிப்பு
முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
திருச்சி
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத்தலைவரும், திருச்சியில் 4 முறை எம்.பி.யாக இருந்தவருமான மறைந்த எல்.அடைக்கலராஜின் 87-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி பாரதியார் சாலையில் ஜென்னிபிளாசா வளாகத்தில் உள்ள அடைக்கலராஜ் சிலைக்கு அவரது மகன்களும், தொழிலதிபர்களுமான ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் முன்னிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், கவுன்சிலர் ரெக்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ், கள்ளிக்குடி சுந்தரம், ராஜாடேனியல்ராய், சிவா மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story