முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை


முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை
x

குடியாத்தம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 78), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.

இந்த நிலையில் ஜெயராமன் அக்ராவரம் ஏரிக்கரை பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயங்கி நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மயங்கிய நிலையில் இருந்த ஜெயராமனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது ஆம்புலன்சில் வந்தவர்கள் ஜெயராமனை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசில் அவரது மகன் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் ஜெயராமன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story