விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்லடம், மே.18-

பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றிய தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் கொளந்தசாமி, தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், லோகநாதன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


----------------


Next Story