முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்


முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்
x

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (வயது 76) உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

மதுரை,

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (வயது 76) உடல்நலக்குறைவால் மதுரை திருமங்கலம் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

* 1977, 80, 84, 1991 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

* 1991 முதல் 1998 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா.

* 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர்.

* 2006-ல் அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா தொடர்ந்து திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார்.

* அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார்.

* பெரியகுளம் எம்.பி. தொகுதியில் வென்று வாஜ்பாய் அரசில் கப்பல் மற்றும் போக்குவரத்துறை மந்திரியாக இருந்துள்ளார்.


Next Story