முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவு தினம்


முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவு தினம்
x

சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டார்.

நினைவு தினம்

தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் 3-ம் ஆண்டு நினைவு தினம் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த கோவிந்தபேரியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தலைமையில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க பி.எச்.பாண்டியன் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக மணிமண்டபம் வரை சென்றனர்.அதனைத்தொடர்ந்து ஜெயபிரதீப், பி.எச்.பாண்டியன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தமிழக அரசின் முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, தென்காசி மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன், விருதுநகர் மாவட்ட செயலாளர் கதிரவன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்கள் செல்லப்பன், அசோகன்,

மாநில சிறுபான்மை அணி துணைச்செயலாளர் லாரன்ஸ், நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திராளானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


Next Story