பயிர் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிக்கும் நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.


பயிர் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிக்கும் நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
x

பயிர் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிக்கும் நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

திருப்பூர்

பயிர் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிக்கும் நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பூச்சி விரட்டி

விளைநிலங்களில் ஏதேனும் பூச்சிகள் நடமாட்டம் தெரிந்தால் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறேன் என்ற பெயரில் ரசாயன மருந்துகளை தெளிக்கிறோம். ஆனால் நமது முன்னோர்கள் ரசாயன மருந்துகள் எதுவும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. எல்லா பூச்சிகளும் பயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் என்று வகை பிரித்து அடையாளம் காணத் தெரிந்திருந்தார்கள். அத்துடன் அவர்கள் இயற்கை முறையிலான பூச்சிக்கொல்லிகளைக் கூட பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக பூச்சி விரட்டிகளையே பயன்படுத்தினார்கள். தற்போதைய நிலையில் விவசாயிகள் நன்மை செய்யும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை நண்பர்களாக்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் தீமை செய்யும் பூச்சிகளைத் தின்று அழிக்கும் இரை விழுங்கிகள் பயிர் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

குளவி ரகங்கள்

கண்ணாடி இறக்கை இரை விழுங்கிகளில் சுமார் 65-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. இதில் கிரைசோபா என்னும் ரகம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சிகள் ஆகியவற்றின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளைத் தாக்கி அழிக்கிறது. குஞ்சுப் பருவத்திலேயே தனது தாக்குதலை தொடங்கிவிடும் கிரைசோபா தனது வாழ்நாளில் 400-க்கும் மேற்பட்ட தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்.

செலானஸ், கொடிசியா, பிகோனிட், பெதிலிட்ஸ், இக்மானிட், பிராகிமீரியா உள்ளிட்ட குளவி ரகங்கள் காய்ப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நீர் நிலைகளுக்கு மேல் மட்டுமல்லாமல் குடியிருப்புகளுக்கு அருகிலும் பறக்கும் தட்டான்கள் எனப்படும் தும்பிகள் மிகச் சிறந்த வேட்டையாடிகளாகும். இவை பறந்து கொண்டிருக்கும் கொசுக்கள், மற்றும் சிறு பூச்சிகளைக் கூட வேட்டையாடி உண்ணும். இவை கால்களால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம்புழுக்களைப்பிடித்து அழிக்கிறது.

நன்மை செய்யும் பூச்சிகளில் பொறிவண்டுகள் முக்கிய இடம் பிடிக்கிறது. இவை அசுவினி, தத்துப்பூச்சிகள், காய்ப்புழுக்கள், அதன் முட்டைகள், வெள்ளை ஈக்கள், அதன் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை அழிக்கும். எனவே தென்னந்தோப்பு மற்றும் வயல்வெளிகளில் பொறிவண்டுகள் வளர்வதற்கேற்ற சூழலை உருவாக்க வேண்டும்.

எல்லாவிதமான வெட்டுக்கிளிகளும் பயிர் சேதத்தை உருவாக்கக் கூடியவை இல்லை. தன் உடலை விட சுமார் 3 மடங்கு நீளமான கொம்பு போன்ற உணர் உறுப்பைக் கொண்ட நீளக்கொம்பு வெட்டுக்கிளிகள் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும். இவை பூச்சிகளின் முட்டைகள் மற்றும் தத்துப்பூச்சிகளை உணவாக்கிக்கொள்ளும்.

ஒட்டுண்ணிகள்

அசாசின் வண்டுகள் அந்துப்பூச்சிகளையும் புழுக்களையும் தாக்கி அழிக்கும். தனது உருவத்தை விட பெரிய பூச்சிகளையும் தாக்கும் தன்மை கொண்ட இதற்கு பெயர் பொருத்தமானது தான்.

சிலந்திகள் பல வண்ணங்களில், பல்வேறு உருவ அமைப்புகளில் இருக்கும். இவற்றில் அனைத்து ரகங்களுமே பூச்சிகளை வேட்டையாடி உண்ணக் கூடியவை தான். ஒவ்வொரு சிலந்திப்பூச்சியும் தனது வாழ்நாளில் 500-க்கும் மேற்பட்ட பூச்சிகளை தாக்கி அழிக்கும்.

பயிர்களுக்கிடையில் மகரந்தச்சேர்க்கை நடப்பதற்கு முக்கிய பங்காற்றும் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளும் நன்மை தரும் பூச்சியினங்களேயாகும். இதுதவிர டிரைகோடிரம்மா உள்ளிட்ட முட்டை ஒட்டுண்ணிகள், புழு ஒட்டுண்ணிகள், கூட்டுப்புழு ஒட்டுண்ணிகள் என நன்மை தரும் பூச்சிகளின் பட்டியல் மிக நீண்டதாக உள்ளது. எனவே ஒவ்வொன்றுக்கும் ரசாயன மருந்துகளின் துணையை நாடாமல் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உலா வரும் பூச்சிகளை உற்று நோக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அங்கே உங்கள் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதன்பிறகே பயிர் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். முடிந்தவரை நன்மை தரும் பூச்சிகள் வளரும் சூழலை பராமரியுங்கள். நஞ்சில்லா விவசாயத்தில் இந்த நன்மை தரும் நண்பர்களின் பங்களிப்பைப் பெற்று ஆரோக்கியமான வாழ்வை அனைவருக்கும் அளித்திடுவோம்.

---

3 காலம் படம் உள்ளது

===========


Next Story