கள்ளிமந்தையம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கள்ளிமந்தையம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

கள்ளிமந்தையம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கள்ளிமந்தையம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொருளூரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கி பேசினார்.

இதில், விவசாயிகள் சங்க துணைச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் பெருமாள், தொப்பம்பட்டி ஒன்றிய தலைவர் வேலுச்சாமி, செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய நிர்வாகி கனகு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு, தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story