பாலை தரையில் கொட்டி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்


பாலை தரையில் கொட்டி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்
x

பாலை தரையில் கொட்டி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

அவினாசி

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்கம் சார்பில் அவினாசி ஒன்றியம், கருணைபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கறவை மாடுகளுடன்புஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்து தர வேண்டும். ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்ய வேண்டும். ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள 300 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். பால் கொள்முதல் பாக்கி பணத்தை முழுவதுமாக வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் பவுடரை சேர்த்து வழங்க வேண்டும். தீபாவளிக்கு முன் பாக பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் உள்ளிட்ட விவசாயிகள் கால்நடைகளோடு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய நிர்வாகி குமாரசாமி, மாவட்ட தலைவர் கொளந்தசாமி, விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம் ஒன்றிய தலைவர் முத்துரத்தினம், ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் சுப்பிரமணி, கருப்புசாமி, மணி பால் கூட்டுறவு சங்க தலைவர் சின்னசாமி, தங்கவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்குளி தாலுகா ஓட்டுவிலாங்காடு, சுக்காகவுண்டன் புதூர், சடையம்பதி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக கறவை மாடுகளுடன் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். போராட்டத்தில் பால் கூட்டுறவு சங்க தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், சேடர்பாளையம் பழனிசாமி, செங்கப்பள்ளி கூட்டுறவு சங்க இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள். பின்பு பாலை சாலையில் ஊற்றி தனது எதிர்ப்பை பதிவு செய்தனர்.



Next Story