நெல் அறுவடை எந்திரம்


நெல் அறுவடை எந்திரம்
x

நெல் அறுவடை எந்திரம்

திருப்பூர்

போடிப்பட்டி

வேளாண் பொறியியல் துறை மூலம் நெல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடை எந்திரம்

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் அமராவதி அணையை அடிப்படையாகக் கொண்டு பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மடத்துக்குளம் பகுதியில் தற்போது கணியூர், காரத்தொழுவு, மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர், குமரலிங்கம், ருத்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது ஒருசில பகுதிகளில் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே குறைந்த வாடகையில் நெல் அறுவடை எந்திரங்களை வழங்க வேளாண் பொறியியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்முதல் மையம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நெல் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பது நிரந்தரமாகி விட்ட நிலையில் எந்திரங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் உடுமலை வேளாண் பொறியியல் துறையில் வாடகை எந்திரங்கள் கேட்டால் ஈரோட்டில் அறுவடைக்காலம் முடிந்தால் தான் நமக்கு கிடைக்கும் என்கிறார்கள். இதனால் விவசாயிகள் கூடுதல் செலவு செய்து தனியார் அறுவடை எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கென தனிப்பட்ட அறுவடை எந்திரத்தை அதிகாரிகள் கேட்டுப் பெற வேண்டும். உரிய பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

மேலும் தற்போது கண்ணாடிப்புத்தூர் பகுதியில் நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்துக்கு சிறு விவசாயி ஒருவர் அறுவடை செய்த நெல்லை கொண்டு சென்றால், அந்த மூட்டைகளை கையாள்வதற்கான கூலி ஆட்களையும் அவர்களையே அழைத்து வரச் சொல்கிறார்கள். இதனால் சிறு விவசாயிகள் நெல்லை வியாபாரிகள் மூலமாக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது மறைமுகமாக வியாபாரிகளுக்கு உதவும் விஷயமாகவே உள்ளது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து தடையில்லாமல் சிறு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.



Next Story