சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
பார்முலா 4 கார் பந்தயத்துக்காக தீவுத்திடலில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
சென்னை,
சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது.தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.
பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பார்முலா 4 கார் பந்தயத்துக்காக தீவுத்திடலில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story