கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா


கோட்டை கருப்பணசாமி  கோவில் திருவிழா
x

சாணார்பட்டி அருகே கோட்டை கருப்பணசாமி கோவிலில் திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் கோட்டை கருப்பணசாமி, காளியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சுமார் 60 அடி உயர மரம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது விளக்கெண்ணெய், கேப்பை ஆகியவை தடவப்பட்டன. அந்த கழுமரத்தை கோவில் மந்தையில் ஊன்றப்பட்டது. பின்னர் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் கழுமரத்தில் போட்டி போட்டு உச்சிக்கு ஏறினர். விழாவில் வீரசின்னம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story