மின் மயானம் கட்ட அடிக்கல் நாட்டு விழா


மின் மயானம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
x

களக்காட்டில் மின் மயானம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு நகராட்சி சார்பில் நகர்ப்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.45 கோடி செலவில் மூணாற்று பிரிவில் மின் மயானம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நகராட்சி துணைத்தலைவரும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பி.சி.ராஜன், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story