புதிய பாலம்-சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
நாங்குநேரி யூனியன் பகுதியில் புதிய பாலம்-சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் சங்கனாங்குளம் பஞ்சாயத்து சிவந்தியாபுரத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.8.58 லட்சம் மதிப்பில் பால்பண்ணையில் இருந்து சுடுகாடு செல்லும் பாதையில் சிறுபாலம் அமைத்தல், சிவந்தியாபுரம் மெயின்தெருவில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தில் புதிய சிமெண்டு சாலை, தெற்கு விஜயநாராயணம் மேலூரில் ரூ.6.5 லட்சத்தில் தனிநபர் குடிநீர் இணைப்பு, தெற்கு விஜயநாராயணம் கீழூரில் ரூ.7.5 லட்சத்தில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி, இறைப்புவாரி பஞ்சாயத்து ஏமன்புதுக்குளத்தில் புதிய வாறுகால் அமைக்கும் பணிகள் உள்பட ரூ.40 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, எஸ்.ஆரோக்கிய எட்வின், ஒன்றிய கவுன்சிலர் எம்.ஆர்.அகஸ்டின் கீதராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் எஸ்.சின்னத்தம்பி (சங்கனாங்குளம்), மோகனா யோசுவா (இறைப்புவாரி), ஊராட்சி துணைத்தலைவர்கள் ராஜம்மாள், முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சவுமியா எட்வின் நாங்குநேரி யூனியன் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அவரை அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.