பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ரூ.50 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.50 லட்சத்தை ஞானதிரவியம் எம்.பி. ஒதுக்கீடு செய்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் முகமது மீரா மைதீன் தலைமை தாங்கினார். முஸ்லிம் கல்விக்குழு தலைவர் அப்துல் காதர், துணைத்தலைவர் முகமது அலி அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, லட்சுமணன், அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி தலைவர் செய்யது அகமது, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, தலைமை ஆசிரியர் ஷேக் முகமது, கோல்டன் ஜூபிலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜெசிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.