ரூ.3 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
பழனி அருகே ரூ.3 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டார்.
பழனி அருகே உள்ள புளியம்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ரூ.3 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான க.பொன்ராஜ் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், சுமார் 1,000 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் பயன்பாட்டுக்கு வரும்போது ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி சட்டமன்ற தொகுதிகளில் குடிநீர் தேவைகள் பூர்த்தியடையும். இதனால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.
பின்னர் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பட்டுச்சேலைகள் வழங்கப்பட்டன.
இதில் ெதாப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத் தலைவர் பி.சி. தங்கம், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் என்.பி.சி. பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், புளியம்பட்டி ஊராட்சி தலைவர் சந்திரா சரவணன், ஒன்றியக்குழு கவுன்சிலர் சுலோச்சனா சோமு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், தி.மு.க. கிளை செயலாளர்கள் கண்ணுச்சாமி, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.