நெடுவயல் ஊராட்சியில் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா


நெடுவயல் ஊராட்சியில் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெடுவயல் ஊராட்சியில் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் நெடுவயல் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிவகாமிபுரம் காலனி மற்றும் 1-வது, 4-வது தெருக்களில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி மற்றும் நெடுவயல் - கொடிக்குறிச்சி இணைப்பு சாலையில் மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

விழாவிற்கு முன்னாள் மாவட்ட செயலாளரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சுப்பம்மாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நெடுவயல் முப்புடாதி, கொடிக்குறிச்சி உடையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் வரவேற்றார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். கிளை செயலாளர் நெடுவயல் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.


Next Story