கீழப்பாவூரில் அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா


கீழப்பாவூரில் அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூரில் அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பாவூர் மைதானம் அருகில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாகல்குளத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி கட்டிட பணிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ராஜா தெருவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ராதா, கீழப்பாவூர் நகர செயலாளர் ஜெயடினா முருகன், மாநில தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் இலக்குமணதங்கம், கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலையா பாண்டியன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், பேரூர் இணை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கலந்து கொண்டனர்.


Next Story