பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 4 பேர் கைது
திருவாரூரில், அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் பாப்புலர் பி்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூரில், அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் பாப்புலர் பி்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு
திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் கடந்த 23-ந் தேதி இரவு நின்று கொண்டிருந்த 3 அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார்.இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் பஸ்களின் கண்ணாடி உடைப்பு தொடர்பாக திருவாரூர் கொடிக்கால்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது(வயது 35), திருவாரூர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த ஹாஜாநிவாஸ்(22), கொடிக்கால்பாளையத்தை சேர்ந்த முகமது மகசூன்மஹதீர்(30) மற்றும் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த அஹமதுல்லா(28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கடந்த 23-ந் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக திருவாரூரில் அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது.கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் பாப்புலர் பி்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.