பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் ஆசாரி தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 29). இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம் ஒருவர் தன்னுடைய பெயர் சங்கர் என்றும், தனியார் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், வங்கியில் நகை ஏலத்திற்கு வருவதாகவும் ரூ. 30 ஆயிரம் கொடுத்தால் 2½ பவுன் வாங்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய ராஜேஸ்வரி அந்த நபருக்கு தனது தந்தை மூலமாக ரூ. 30 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற நபர் பின்னர் தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக ராஜேஸ்வரி சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர், காரைக்குடி சிவானந்த நகரை சேர்ந்த சங்கர் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.