வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி; அ.தி.மு.க. கவுன்சிலர்-கணவர் மீது வழக்கு


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி; அ.தி.மு.க. கவுன்சிலர்-கணவர் மீது வழக்கு
x

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி

போடி நாகலாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், "உத்தமபாளையம் அருகே அணைப்பட்டியை சேர்ந்த வாஞ்சிநாதன் மனைவி ஜான்சி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

இவர் கடந்த 2020-ம் ஆண்டு உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவராக இருந்தார். அவரும், அவருடைய கணவரும், எனது மகள் வித்யாவுக்கு ஊராட்சி செயலர் பணி வாங்கித் தருவதாக கூறினர். இதற்காக அவர்களிடம் ரூ.11 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டனர்" என்று கூறியிருந்தார். இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் வாஞ்சிநாதன், ஜான்சி ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story