அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி; நகை பட்டறை தொழிலாளி கைது


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி; நகை பட்டறை தொழிலாளி கைது
x

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்துவிட்டு தஞ்சையில் பதுங்கிய நகை பட்டறை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்துவிட்டு தஞ்சையில் பதுங்கிய நகை பட்டறை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ரூ.20 லட்சம் மோசடி

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திண்டுக்கல் அசோக் நகரை சேர்ந்த கண்ணன் (53) என்பவர் அறிமுகம் ஆனார். கண்ணன் நகை பட்டறை தொழிலாளி ஆவர். இந்த நிலையில் கண்ணன் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் கண்ணதாசனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.

அதை உண்மை என நம்பிய கண்ணதாசன் அவருக்கும், அவருடைய தம்பி, தம்பி மனைவி, மைத்துனர் மகன் ஆகிய 4 பேருக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டார். அதை பயன்படுத்தி கொண்ட கண்ணன் 4 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கண்ணதாசனிடம் இருந்து ரூ.20 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் பேசியபடி வேலை வாங்கி கொடுக்காததால் கண்ணதாசன், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார்.

தஞ்சையில் கைது

இதைத்தொடர்ந்து பணத்தை திரும்ப தரும்படி கண்ணனிடம், அவர் கேட்டார். ஆனால் அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதோடு, திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணதாசன், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கண்ணன் தனது குடும்பத்துடன் தஞ்சையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தஞ்சைக்கு சென்று அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story