முதியவரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி


முதியவரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:36+05:30)

காரைக்குடியில் முதியவரிடம் இருந்து ரூ.2¾ லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

காரைக்குடியில் முதியவரிடம் இருந்து ரூ.2¾ லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிக்கையாளர் சேவை மைய எண்

காரைக்குடி சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 79). இவர் தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். பழனியப்பன் கடந்த வாரம் இந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் எண்ணை தெரிந்து கொள்வதற்காக இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர் சேவை மைய எண் என்ற பெயரில் ஒரு எண் இருந்துள்ளது.

அந்த எண்ணை பழனியப்பன் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு குறித்த சந்தேகம் சம்பந்தமாக பேசியுள்ளார். அதில் பேசிய நபர் பழனியப்பனிடம் வங்கி கணக்கு தொடர்பான அனைத்து விபரங்களையும் கேட்டுள்ளார். அவரும் அனைத்து தகவல்களையும் கூறினார்.

பணம் மோசடி

அதன் பிறகு 4 நாட்களில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 13 தவணைகளில் ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 299 எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கியில் கேட்டபோது அது அந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய எண் இல்லை என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.Related Tags :
Next Story