ஆன்லைனில் சுடிதார் அனுப்புவதாக கூறி ரூ.5 ஆயிரம் மோசடி
ஆன்லைனில் சுடிதார் அனுப்புவதாக கூறி ரூ.5 ஆயிரம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்துள்ள புது வயலை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி உமா நந்தினி (வயது 29). செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். உமா நந்தினி கடந்த மாதம் ஆன்லைனில் தேடியபோது குறைந்த விலையில் சுடிதார் தருவதாக விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பிய அவர் 5 சுடிதார் வாங்குவதற்கு ரூ.5 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தினர் ஒரே ஒரு சுடிதார் மட்டும் உமா நந்தினிக்கு அனுப்பி உள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த உமாநந்தினி இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story