பெண்ணிடம் ரூ.6¾ லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.6¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:16:07+05:30)

பெண்ணிடம் ரூ.6¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவியை சேர்ந்தவர் தேவி (வயது 48). இவரிடம் காரைக்குடி ஆறுமுக நகரை சேர்ந்த ராமநாதன் என்பவர் எனது வீட்டு அருகே 2½ செண்ட் வீட்டு மனை இடம் குறைந்த விலையில் கிடைக்கும் அதனை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். அதனை நம்பிய தேவி வாங்கி கொள்வதாக கூற ராமநாதன் அந்த இடத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தது போல போலி ஆவணங்களை தயார் செய்து தேவியிடம் கொடுத்து ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன்பின்தான் அந்த இடம் நகராட்சிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதையடுத்து தேவி, ராமநாதன் வீட்டிற்கு சென்று அவரிடம் பணத்தை கேட்ட போது தருவதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி கொண்டே வந்துள்ளார்.

சம்பவத்தன்று தேவி அவரது வீட்டுக்கு சென்று மீண்டும் பணத்தை கேட்டபோது ராமநாதனும், அவரது மனைவி செந்தமிழ் பாவையும் சேர்ந்து ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேவி காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் ராமநாதன் அவரது மனைவி செந்தமிழ் பாவை ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story