ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தருவது போல் நடித்து ரூ.28 ஆயிரம் மோசடி


ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தருவது போல் நடித்து ரூ.28 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தருவது போல் நடித்து ரூ.28 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மனைவி சத்யா(வயது 35). இவர் கீழக்கோட்டை அருகே உள்ள ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்ற ஒருவரிடம் ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தருமாறு கேட்டார். பின் நம்பரை தெரிந்து கொண்ட அந்த நபர் பணம் எடுப்பது போல் நடித்து உங்களின் ஏ.டி.எம். கார்டில் பணம் வரவில்லை எனக்கூறி அவரிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த சத்யாவின் செல்போனுக்கு ரூ.28 ஆயிரத்து 500 எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்தது. மர்ம நபர் சத்யாவின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் வழக்குப்பதிவு செய்து பணம் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகிறார்.


Related Tags :
Next Story