வங்கி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் நூதன முறையில் மோசடி


வங்கி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் நூதன முறையில் மோசடி
x

வள்ளியூரில் வங்கி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் ேமாசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூரில் வங்கி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் ேமாசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பணம் எடுக்க வந்த பெண்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் டெய்சி ஜெயராணி (வயது 62).

இவரது மகன் ஜஸ்டின் துரைப்பாண்டி.

டெய்சி ஜெயராணி தனது மகனின் வங்கி ஏ.டி.எம். கார்டை எடுத்துக் கொண்டு நேற்று வள்ளியூர்-ராதாபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.

அப்போது தனக்கு ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்கத் தெரியாததால் அருகில் இருந்த ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணத்தை எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.

மோசடி

அந்த மர்ம நபர், ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் போட்டு பார்த்துள்ளார். பின்னர் பணம் ஏ.டி.எம்.-ல் இருந்து வரவில்லை எனக்கூறி தன்னிடமிருந்த போலியான ஏ.டி.எம். கார்டை நைசாக கொடுத்துள்ளார்.

பின்னர் டெய்சி ஜெயராணியின் ஒரிஜினல் கார்டை எடுத்துக்கொண்டு நைசாக அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் டெய்சி ஜெயராணி மகன் ஜஸ்டின் துரைப்பாண்டி செல்போனுக்கு, வங்கிக்கணக்கில் இருந்து ரூ.8,000 மற்றும் ரூ.1,900 பணம் எடுத்தது போல் குறுந்தகவல் வந்துள்ளது.

இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். டெய்சி ஜெயராணியின் ஏ.டி.எம். கார்டை மாற்றி எடுத்து சென்றவர் அதை பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளது தெரியவந்தது.

புகார்

இந்த நூதன மோசடி குறித்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story