பெண்ணிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி மோசடி
பெண்ணிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி மோசடி
கோவை
சென்னை முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் தம்பி. இவருடைய மனைவி ஹன்னா நேசமணி (வயது 59).இவருக்கு அவரது கணவரின் மருத்துவ செலவு, மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பணம் தேவைப்பட்டது. அப்போது அவரது உறவினர் ஒருவரின் மூலமாக ரியல் எஸ்டேட் புரோக்கர் சுந்தரசாமி (50) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது சுந்தரசாமி வீட்டு பத்திரத்தின் பேரில் கடன் தருவதாக ஹன்னா நேசமணியிடம் கூறியுள்ளார். இதனால் அவர் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து சுந்தரசாமியிடம் கொடுத்து ரூ.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.
கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையை ஹன்னா நேசமணி செலுத்தியும், சுந்தரசாமி வீட்டு பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனை எடுத்து ஹன்னா நேசமணி இதுகுறித்து விசாரித்தார்.அப்போது சுந்தரசாமி ஹன்னா நேசமணியின் வீட்டு பத்திரத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ரியல் எஸ்டேட் புரோக்கர் சுந்தரசாமியை கைது செய்தனர்.