முக்கிய நபர்களின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி
குடியாத்தம் பகுதியில் முக்கிய நபர்களின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்ய முயன்ற நபர்கள்.
வேலூர்
குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தி.மு.க., அ.தி.மு.க., பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், ஓட்டல் அதிபர்கள், அரசு அதிகாரிகள், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களின் புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் முகநூலில் கணக்கை தொடங்கி மோசடி செய்தனர்.
இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் பெயரில் போலி முகநூல் தொடங்கப்பட்டு நகரமன்ற தலைவர் பணம் கேட்பது போல் பணம் கூறப்பட்டுள்ளது. உஷாரான அவரது நண்பர்கள் இது குறித்து உடனடியாக நகர மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக இந்த மோசடி சம்பவம் குறித்து சவுந்தர்ராஜன் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தியிடம் புகார் அளித்தார்.
Related Tags :
Next Story