பெண் போலீசின் வீடு கட்டுமான பணியில் மோசடி


பெண் போலீசின் வீடு கட்டுமான பணியில் மோசடி
x

பெண் போலீசின் வீடு கட்டுமான பணியில் மோசடி செய்த கட்டுமான என்ஜினீயர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

விருதுநகர்

விருதுநகர் கூரைக்குண்டு கிராமத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சாந்தி தனபால் (வயது 53). இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக விருதுநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்டார். கட்டுமான நிறுவனம் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தருவதாகவும் சுற்றுச்சுவருக்கு தனியாக செலவாகும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ஆர்க்கிடெக்டாக இருந்த ெநல்லை சாந்தி நகரை சேர்ந்த கவுசல்யா பிரியதர்ஷினி (27) என்பவர் சுற்றுச்சுவர் சேர்த்து ரூ.36 லட்சத்து 36 ஆயிரத்து 900-க்கு வீட்டை கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சாந்தி தனபால் இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டு கவுசல்யா பிரியதர்ஷினி வங்கி கணக்கில் 19 தவணைகளாக ரூ 33 லட்சத்து 29 ஆயிரத்து 762-ஐ செலுத்தியுள்ளார்.

கட்டுமான பணியின் போது நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கண்ணன் (38) என்பவர் கள என்ஜினீயராகவும், திருச்சுழி எம்.ரெட்டியபட்டியைச் சேர்ந்த ராகவன் (38) மேஸ்திரியாகவும் பணியாற்றியுள்ளனர். இவர்கள் ஒப்பந்தப்படி கட்டுமான பொருட்களை பயன்படுத்தாமல் தன்னை மோசடி செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை கோரி சாந்தி தனபால் விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சூலக்கரை போலீசார் கவுசல்யா பிரியதர்ஷினி, கண்ணன் மற்றும் ராகவன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story