விழுப்புரத்தில்தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8¼ லட்சம் மோசடிபோலீசார் விசாரணை
விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8¼ லட்சம் மோசடியில் ஈடுபட்டவா்கள்ட குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கையை சேர்ந்தவர் விஜயராஜ். என்ஜீனியரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் முகநூல் மூலமாக பேசி அறிமுகமான ஒருவர், செல்போன் எண்ணை பெற்று பேசி வந்துள்ளார். அப்போது, விஜயராஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பரிசு ஒன்றை அனுப்பி இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, விஜயராஜை தொடர்பு கொண்ட ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளது இதை வாங்குவதற்கு டெலிவரி கட்டணம், ஜி.எஸ்.டி. கட்டணம் ஆகியவற்றை அனுப்புமாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறிய வங்கி கணக்கிற்கு, விஜயராஜ் பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த நபர் பார்சலை அனுப்பாமல், மேலும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் தான், தன்னை அவர் ஏமாற்றுவதை அறிந்தார். இதுகுறித்து விஜயராஜ் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.