மாத சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி
ஆரணி நகரில் மாத சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவானவர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஆரணி
ஆரணி கொசப்பாளையம் பெரிய ஜெயின் தெருவை சேர்ந்தவர் வெண்ணிலா சங்கர் என்பவர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நீண்ட காலமாக மாத சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெண்ணிலா சங்கர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதனால் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, சோட்டாபாய், ராஜேந்திரன், பரசுராமன், உள்பட 44 பேர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் வெண்ணிலா சங்கர் மீது புகார் அளித்தனர்.
அதில் ரூ.1 கோடி வரை சீட்டு பணம் கட்டி ஏமாந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் அவர்களிடம், ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளதால் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தான் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
எனவே, இந்த புகார் மனு மீது முறையாக விசாரணை நடத்தி பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.
மேலும் இது சம்பந்தமாக நீங்களும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.