நெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி - 3 பேர் மீது வழக்குப்பதிவு
நெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
2019ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, மங்காளூர்- விழுப்புரம் தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், நடைபாதையில் 2.1 மீட்டருக்கு பதிலாக 0.90 மீட்டர் மட்டுமே டைல்ஸ் கற்களை பதித்து மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பணியில் உள்ள 2 அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story