பரிசு பொருள் பார்சல் வந்திருப்பதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி


பரிசு பொருள் பார்சல் வந்திருப்பதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி
x

வறுமையில் வாடும் குடும்பத்தினரிடம் பரிசு பொருள் பார்சல் வந்திருப்பதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

ரூ.12 லட்சம் மோசடி

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது தாயார் ஜெயந்தியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலத்தில் பேசிய பெண் தன்னுடைய மகள் பிறந்த நாளை முன்னிட்டு உங்களுக்கு பரிசு தொகை மற்றும் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக ஜெயந்தியிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளனர். அது தற்போது விமான நிலையத்தில் உள்ளது. இதனை பெற ஜி.எஸ்.டி. கட்ட முதலில் ரூ.35 ஆயிரம் வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து கல்லூரி மாணவனான விமல்ராஜ் ரூ.35 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியுள்ளார். பின்னர் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக சிறுக சிறுக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி ரூ.12 லட்சம் கட்டி உள்ளனர்.

போலீசார் விசாரணை

விமல்ராஜ் தந்தை செல்வராஜூக்கு தொண்டை புற்று நோய் உள்ளதால் சிகிச்சைக்காக பரிசு தொகை ரூ.33 லட்சமும், பரிசு பொருட்களும் கிடைக்கும் என நம்பி அக்கம், பக்கத்து வீட்டினரிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து பணம் கட்டியும் பரிசு பொருட்கள் வராததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இதுகுறித்து நேற்று விமல்ராஜ் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story