கேஎஃப்சி நிறுவனத்திடம் இருந்து கிளை அமைக்க உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி..!

கேஎஃப்சி நிறுவனத்திடம் இருந்து கிளை அமைக்க உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி..!
x

கேஎஃப்சி நிறுவனத்திடம் இருந்து கிளை அமைக்க உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த பீகார் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கேஎஃப்சி நிறுவனத்திடம் இருந்து கிளை அமைக்க உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த பீகார் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை உக்கடம் கோட்டை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர், பிரபல பன்னாட்டு நிறுவனமான கேஎஃப்சி நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று கிளை அமைக்க இணையத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில், பிரியதர்ஷினியை தொடர்பு கொண்ட சிலர், உரிமம் பெற்றுத்தருவதாக கூறி அவரிடமிருந்து 14 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து, பிரியதர்ஷினி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, மோசடியில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தை சேர்த்த கும்பல் என்பது தெரியவந்தது. இதில், பீகாரை சேர்ந்த ராம்பிரவேஸ் பிரசாத் மற்றும் சுராஜ் குமார் ஆகிய இருவர் மோசடியில் ஈடுபட்டதுடன் இருவரும் வேறு ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சத்தீஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

உடனே, சத்தீஸ்கர் சென்று இருவரையும் கைது செய்து கோவை அழைத்து வந்த போலீசார், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story