வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.16½ லட்சம் மோசடி:டெல்லி வாலிபர் கைது


வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.16½ லட்சம் மோசடி:டெல்லி வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.16½ லட்சம் மோசடிசெய்த டெல்லி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

திருச்சி விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்த டெல்லி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.16½ லட்சம் மோசடி

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மனைவி ராணி. இவரது செல்போன் எண்ணுக்கு திருச்சி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதனைப் பார்த்த ராணி தனது மகனின் வேலைக்காக, அதில் குறிப்பிட்டு இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அதில் பேசியவர்கள், பல்வேறு காரணங்களைக் கூறி பணம் கேட்டுள்ளனர். தனது மகனுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பிய ராணி ரூ.16 லட்சத்து 61 ஆயிரத்து 38-ஐ ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட நபர்கள், பின்னர் வேலை வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராணி, இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பினார்.

டெல்லி வாலிபர் கைது

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், டெல்லி ஜமீயா நகரை சேர்ந்த மொஹத் காலிக்கான் மகன் மொஹத் அபுஷார்கான் (வயது 22) என்பவர் ராணியிடம் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி விரைந்து சென்று, மொஹத் அபுஷார்கானை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் மொஹத் அபுஷார்கானை புதுடெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணி ஜெயிலில் அடைத்தனர்.

மொஹத் அபுஷார்கான், பொதுமக்களிடம் மோசடியாக பணத்தை பெற்று, வேறு சிலரின் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் பெற்றுள்ளார். மேலும் தனது அண்ணன் வங்கி கணக்குகளிலும் பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார். இந்த மோசடியில் பலநபர்கள் ஈடுபட்டிருப்பதால், அவர்களை கைது செய்யும் பொருட்டு சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story