அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2¾ லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 18 April 2023 12:30 AM IST (Updated: 18 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே அரசு ேவலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2¾ லட்சம் மோசடி செய்த எல்.ஐ.சி. ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 62). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துதுறை ஊழியர். இவர், திண்டுக்கல் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகன் கார்த்திக்குக்கு, திண்டுக்கல்லில் பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் நத்தத்தை சேர்ந்த பிச்சைமணி (50) என்பவர் எல்.ஐ.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

மனுவை விசாரித்த கோர்ட்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பிச்சைமணி மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story