பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி
x

பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

திருச்சி கே.கே.நகர் கக்கன் காலனியை சேர்ந்தவர் சமீம்பேகம் (வயது 35). இந்நிலையில் கே.கே.நகர் ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த நசீர்பாட்சா(47) என்பவர் சமீம்பேகத்தை தொடர்பு கொண்டு, தான் பங்குச்சந்தை நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்வதாகவும், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி அவரிடம், கடந்த ஆண்டு மே மாதம் ரூ.3 லட்சத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்படி சமீம்பேகம் வழங்கியுள்ளார். பணத்தை வாங்கிய நசீர்பாட்சா, அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாக தெரியவில்லை. இந்தநிலையில் தான் முதலீடு செய்ய கொடுத்த பணத்தை திரும்பத்தரும்படி சமீம்பேகம் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததுடன், அவருக்கு நசீர்பாட்ஷா கொலை மிரட்டல விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சமீம்பேகம் திருச்சி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், நசீர்பாட்ஷா மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story